தொழில்நுட்பம்
கண்டறியப்படாத நோய்க்கு சாட்ஜிபிடி தந்த தீர்வு: மருத்துவ உலகில் புதிய புரட்சியா?

கண்டறியப்படாத நோய்க்கு சாட்ஜிபிடி தந்த தீர்வு: மருத்துவ உலகில் புதிய புரட்சியா?
செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் மருத்துவத் துறையில் சாத்தியமான மாற்றங்களைக் கொண்டு வர முடியுமா? Reddit பயனர் பதிவிட்ட அனுபவம், இந்த கேள்விக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது. பல ஆண்டுகளாக மருத்துவர்களால் கண்டறிய முடியாத அரிய மருத்துவக் ஒன்றைத் தீர்க்க உதவியதாக அந்தப் பயனர் கூறியுள்ளார். இது மருத்துவ நோயறிதல் துறையில் AI-ன் சாத்தியக்கூறுகள் மற்றும் சவால்கள் குறித்து பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.கண்டறியப்படாத நோய்க்கு ChatGPT தந்த தீர்வு@Adventurous-Gold6935 என்ற Reddit பயனர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவரிக்க முடியாத அறிகுறிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல MRI, CT ஸ்கேன்கள், ரத்தப் பரிசோதனை, மற்றும் லைம் நோய்க்கான பரிசோதனைகள் செய்தும், அமெரிக்காவின் தலைசிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், எந்தவொரு சரியான நோயறிதலும் கிடைக்கவில்லை.அவர் தனது அனைத்து அறிகுறிகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளை ChatGPT-யில் பதிவேற்றியுள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, ChatGPT சாத்தியமான மரபணு பிறழ்வை (genetic mutation) சுட்டிக்காட்டியது: அது ஹோமோசைகஸ் A1298C MTHFR (homozygous A1298C MTHFR). இந்த மரபணு பிறழ்வு, ரத்தத்தில் B12 அளவு சாதாரணமாக இருந்தாலும், உடலில் B12 பதப்படுத்தும் செயல்முறையைப் பாதிக்கக்கூடும் என்று AI தெரிவித்தது. இதுவே அந்தப் பயனருக்கு தெளிவான விடையாக அமைந்தது.மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்திய AI-ன் பரிந்துரைChatGPT-ன் இந்த பரிந்துரையை அந்தப் பயனர் தனது மருத்துவரிடம் கொண்டு சென்றபோது, மருத்துவர் “மிகவும் அதிர்ச்சியடைந்தார்” எனப் பயனர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோயறிதல் அவருக்குப் பொருத்தமாக இருந்தபோதும், இந்த MTHFR பிறழ்வுக்கான பரிசோதனை செய்ய ஏன் மருத்துவர்களுக்கு இதுவரையில் தோன்றவில்லை என்பது புரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொண்டு, வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்த பிறகு, தனது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்தப் பயனர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.இந்தச் சம்பவம் 9,000 க்கும் மேற்பட்ட அப்வோட்டுகளைப் பெற்று, இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பலர் ஆச்சரியத்தையும், சிலர் மருத்துவர்களின் அணுகுமுறை குறித்த அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு பயனர், தனக்கும் இதேபோன்ற அனுபவம் இருந்ததாகவும், ஆரம்பத்தில் மருத்துவர்கள் அலட்சியப்படுத்திய சிக்கலை, 2-வது நரம்பியல் நிபுணர் ஸ்பைனல் டேப் மூலம் கண்டறிந்தார் என்றும் கூறினார். அது மூளையில் நரம்பு அழுத்தம் காரணமாக ஏற்பட்ட Occipital Neuralgia (தலைவலி) என்றும் தெரிவித்தார். மற்றொரு பயனர், “காப்பீட்டு நிறுவனங்கள் AI ஐப் பயன்படுத்தி காப்பீட்டை மறுக்கின்றன, எனவே மக்கள் தங்கள் வேலையை AI தளங்களில் சரிபார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டு, AI பயன்பாட்டின் இருபக்கங்களையும் சுட்டிக் காட்டினார்.AI இன் நோயறிதல் திறன் குறித்து இன்னும் பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. சில ஆய்வுகள் ChatGPT போன்ற LLM (Large Language Model) களின் நோயறிதல் துல்லியம் 70-77% வரை இருக்கலாம் என்று கூறுகின்றன, அதேசமயம் வேறு சில ஆய்வுகள் இது 50%க்கும் குறைவாகவே இருப்பதாகத் தெரிவிக்கின்றன.