இலங்கை
காருக்குள் கடத்தப்பட்ட ஆபத்தான பொருள் ; மடக்கிப் பிடித்த பொலிஸார்

காருக்குள் கடத்தப்பட்ட ஆபத்தான பொருள் ; மடக்கிப் பிடித்த பொலிஸார்
மாத்தறை – பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, காரில் கொண்டு செல்லப்பட்ட 1 கிலோ 50 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலஸ்கலை பகுதியில் சாலைத் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்போது, காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயினை பொலிஸார் பறிமுதல் செய்ததை அடுத்து, ஓட்டுநர் காருடன் தப்பிச் சென்றுவிட்டார்.
பின்னர் அந்த கார் ஹக்மானா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது, மேலும் இது தொடர்பாக வீட்டில் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.