சினிமா
கால்நடைகளின் மனநிலை குறித்து சீமான் வேதனை..!

கால்நடைகளின் மனநிலை குறித்து சீமான் வேதனை..!
நாம் பசுமை விவசாயம், பசு வளர்ப்பு, பால் பொருட்களின் தேவையை பற்றிய விவாதங்களில் ஈடுபடுகிறோம். ஆனால் உண்மை நிலைமையைப் பார்க்க யாருக்கும் நேரமில்லை என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.தென்மண்டலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சீமான் “நாம் பால் வேண்டும், மோர் வேண்டும், வெண்ணை வேண்டும், சீஸ் வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அந்த கால்நடைகளுக்கு நாம் தருவது என்ன? சாக்குப் பைகள், பிளாஸ்டிக், போஸ்டர்கள், வீணான கழிவுகள் தான். பசுக்கள் என்ன சாப்பிடுவது என்பதை யாரும் கவலைப்பட மாட்டோம். அவைகளின் மனநிலையை யாரும் புரிந்து கொள்ள மாட்டோம்” எனக் கூறியுள்ளார்.அவரின் இந்த உரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கால்நடை பாதுகாப்பு மற்றும் பசு வளர்ப்பு பற்றிய விவாதத்திற்கு இதனால் புதிய கோணம் கிடைத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு சிலர் தேவை இல்லாத விடயங்களை கதைக்கின்றார் என கூறியுள்ளனர்.