சினிமா
தனுஷ் பட தலைப்பில் தலையீடு செய்யும் OTT நிறுவனம்..!

தனுஷ் பட தலைப்பில் தலையீடு செய்யும் OTT நிறுவனம்..!
போர் தொழில் இயக்குநர் விக்கினேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள 54 ஆவது திரைப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகி வைரலாகியது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதுடன் தனுஷிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கவுள்ளார். படத்தினை ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் படத்தின் பூஜை நிகழ்வும் இன்று ஆரம்பமாகியது.பூஜைக்கு முன்னதாகவே படத்தின் டியிட்டல் உரிமை விற்பனை ஆகியுள்ளது. ஆகவே இந்த டியிட்டல் நிறுவனம் தலைப்பினை ஆங்கிலத்தில் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதுவும் தலைப்பு ஒரு வார்த்தையில் சுலபமாக அனைத்து மொழி மக்களும் புரிந்து கொள்ளுமாறு வைக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு தனுஷ் இயக்குநரின் விருப்பம் என கூறியுள்ளார்.மேலும் இந்த செய்தி வைரலாகி பலராலும் ” ஆங்கில திணிப்பு ” என பேசப்பட்டு வருகின்றது. தமிழ் படத்திற்கு ஆங்கில பெயர் வைப்பது நியாயம் இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.