இலங்கை
தீடீரென இரு இளைஞர்களை கைது செய்த STF ; வெளியான அதிர்ச்சி காரணம்

தீடீரென இரு இளைஞர்களை கைது செய்த STF ; வெளியான அதிர்ச்சி காரணம்
கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் ஒருகொடவத்த பகுதியில், ஹெரோயின் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட இரு சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள், வெல்லம்பிட்டி மற்றும் கொழும்பு 14 ஐ சேர்ந்த 22, 38 வயதுடையவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடம் இருந்து 15 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் 370 மில்லிகிராம் ஹஷிஷ் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.