இலங்கை
தேங்காய் விலை சரிவு!

தேங்காய் விலை சரிவு!
உள்ளூர்ச் சந்தையில் தேங்காய் விலை வேகமாகச் சரிந்து வருகின்றது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக ஒரு தேங்காய் 220 ரூபாவுக்கு விற்கப்பட்டது. தற்போது 100 ரூபா முதல் 170 ரூபா வரை பல்வேறு விலைகளில் தேங்காய்கள் விற்கப்படுகின்றன. எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் குறைவடையும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.