சினிமா
நம்மை பற்றிய வதந்திகளுக்கு இது தான் Reaction..! நயன்தாராவின் இன்ஸ்டா பதிவு வைரல்..!

நம்மை பற்றிய வதந்திகளுக்கு இது தான் Reaction..! நயன்தாராவின் இன்ஸ்டா பதிவு வைரல்..!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தனது தனித்துவமான நடிப்பு, சுவாரஸ்யமான வாழ்க்கை தருணங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பேசப்படும் பிரபலமாக காணப்படுகின்றார். தற்போது, அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று, மீண்டும் அவரை மீம்ஸ் மற்றும் மீடியா கவனத்தின் மையமாக்கியுள்ளது.நயன்தாரா தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தில், நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இணைந்து மிக அழகாக போஸ் கொடுத்துள்ளனர்.அந்த போட்டோவுடன், “நம்மைப் பற்றிய மோசமான செய்திகளைப் பார்க்கும் போது இது தான் reaction…!” என்ற பதிவையும் இணைத்துள்ளார். நயன்தாராவின் இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியானவுடனே அதிகளவான லைக்கினை பெற்றுள்ளது.