சினிமா
படப்பிடிப்பில் சில்மிஷம் நடிகையிடம் மன்னிப்பு…! மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ..!

படப்பிடிப்பில் சில்மிஷம் நடிகையிடம் மன்னிப்பு…! மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ..!
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் ஷைன் டாம் சாக்கோ, தனது புதிய திரைப்படம் “சூத்ரவாக்கியம்” படப்பிடிப்பு நேரத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக பரபரப்பான விளக்கத்தை அளித்து, அதேவேளை மன்னிப்பும் கேட்டுள்ளார்.இவர் தமிழில் ‘பீஸ்ட்’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழக ரசிகர்களிடமும் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளார். மலையாள சினிமாவில் தனது தனிச்சிறப்பான நடிப்பால் தனித்துவம் பெற்ற இவர். ஷைன் டாம் சாக்கோ ஒரு காட்சியின் படப்பிடிப்பு முடிந்த பிறகு போதையில் இருந்த நிலையில், நடிகையின் அனுமதியில்லாமல் சில்மிஷமாக நடந்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் கலைத்திலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் முதல்முறையாக வாய்மையாகப் பேசிக்கொண்டார் ஷைன் டாம் சாக்கோ. கொச்சியில் நடைபெற்ற சூத்ரவாக்கியம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில், “நான் எதிர்பாராத நடந்து கொண்ட விதம் அந்த நடிகையை பாதித்திருக்கலாம். அது உண்மையாக இருந்தால் அதற்கு உண்மையிலேயே வருந்துகிறேன். நான் நடிகையாக இருந்த அவருடைய மனதைப் புண்படுத்தியிருந்தால், அதற்காக எனது பக்கம் இருந்து ஒரு பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்” என்று கூறினார்.அவர் மேலும், “படப்பிடிப்பு இடத்தில் ஒவ்வொருவரும் பாதுகாப்பான முறையில் பணியாற்ற வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்வேன் .என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த மன்னிப்பு பிறகு, நடிகையிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை என்றாலும், திரையுலகத்தில் இது ஒரு சரியான முன்னோடியாகப் பார்க்கப்படுகிறது.