தொழில்நுட்பம்
பழங்கால டெரோசர் கண்டுபிடிப்பு: 209 மில்லியன் ஆண்டுகள் பழமையான பறக்கும் ஊர்வனம்!

பழங்கால டெரோசர் கண்டுபிடிப்பு: 209 மில்லியன் ஆண்டுகள் பழமையான பறக்கும் ஊர்வனம்!
சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, டைனோசர்கள் நிலத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த காலத்தில், வானத்தில் இறக்கைகளை விரித்துப் பறந்து திரிந்தன டெரோசர்கள் (Pterosaurs). இந்த உயிரினங்கள் டைனோசர்கள் அல்ல, மாறாக அவை தனித்துவமான வகை பறக்கும் ஊர்வன இனத்தைச் சேர்ந்தவை. பூமியின் பண்டைய கால வரலாற்றில், முதன்முதலில் பறக்கும் திறனைப் பெற்ற முதுகெலும்புள்ள உயிரினங்கள் இவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.2013-ஆம் ஆண்டு அரிசோனாவில் ஒரு டெரோசரின் தாடை எலும்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தாலும், நவீன ஸ்கேனிங் தொழில்நுட்ப உதவியுடன் முற்றிலும் புதிய வகை இனம் என்பதை தற்போது உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த ஊர்வன இனத்திற்கு ‘ஈயோடெப்ராடாக்டைலஸ் மெக்கின்டைரி’ (Eotephradactylus mcintireae) என்று பெயரிடப்பட்டுள்ளது. வாஷிங்டன் டி.சி. ஸ்மித்சோனியனின் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த உயிரினத்திற்குப் பெயரிட்டது. நிபுணர்களின் கணிப்புப்படி, இந்த டெரோசரின் புதைபடிவம் 209 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. தற்போது வட அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட டெரோசர்களில் இதுவே மிகப் பழமையானது என்று நம்பப்படுகிறது. இந்த டெரோசரின் தாடை எலும்பு, தொல்லியல் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்களின் தொகுப்பில் ஒரு பகுதியாகும். இந்த புதைபடிவங்களில் எலும்புகள், பற்கள், மீன் செதில் மற்றும் புதைபடிவமாக மாறிய சாணம் ஆகியவை அடங்கும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கடாக்டர் கிளிக்மேன் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், “டிரையாசிக் கால டெரோசர்களின் எலும்புகள் சிறியவை, மெல்லியவை பெரும்பாலும் உள்ளீடற்றவை. எனவே, அவை புதைபடிவமாவதற்கு முன்பே அழிந்துவிடுகின்றன” என்று தெரிவித்தார். 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த தளம் நதிபடுகையாக இருந்ததால், செதில்கள், எலும்புகள் மற்றும் பிற உயிரினங்களின் தடயங்கள் படிநிலை அடுக்குகளால் படிப்படியாக பாதுகாக்கப்பட்டுள்ளன.இந்த உயிரினம் பற்றி மேலும் அறிய, நிபுணர்கள் அதன் பற்களை ஆய்வு செய்தனர். கடற்பறவை அளவுள்ள இந்த ஊர்வனம் தனது வாழ்நாளில் என்ன சாப்பிட்டிருக்கும் என்பதை இதன் மூலம் தெரிந்துகொண்டனர். டாக்டர் கிளிக்மேன், அதன் பற்களின் நுனியில் அசாதாரணமாக அதிக தேய்மானம் இருப்பதைக் கண்டறிந்ததாகக் கூறினார். இந்த ஆதாரம், அந்த உயிரினம் கடினமான உடல் பாகங்கள் கொண்ட எதையோ உட்கொண்டது என்பதைக் காட்டுகிறது. அவை தாங்கள் வாழ்ந்த காலத்தில் கடினமான செதில்களால் மூடப்பட்டிருந்த பழமையான மீன்களை (primitive fish) வேட்டையாடியிருக்கலாம் என்று மிகவும் நம்பப்படுகிறது.இந்த டிரையாசிக் கால டெரோசர், தற்போதுள்ள அரிசோனாவில் பெட்ரிஃபைட் ஃபாரஸ்ட் தேசிய பூங்காவில் உள்ள பண்டைய பாறைகளுக்கு மத்தியில் பாலைவன நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. விஞ்ஞானிகள், இந்த உயிரினத்தின் புதைபடிவங்கள் கிடைத்த தளம், அன்றைய சுற்றுச்சூழல் அமைப்பின் “துல்லியமான ஒரு காட்சியை” பாதுகாத்துள்ளது என்று கூறுகிறார்கள். மேலும், இப்போது அழிந்துவிட்ட விலங்குகளின் குழுக்களையும் அங்கே கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட மற்ற பழங்கால உயிரினங்களில், பழங்கால கவச குரோகோடைல் உறவினர்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் (amphibians) அடங்கும். தவளைகள் மற்றும் ஆமைகள் போன்ற இன்று அடையாளம் காணக்கூடிய சில உயிரினங்களும் அங்கு கண்டறியப்பட்டுள்ளன.