இலங்கை
பழிவாங்கல் அரசாங்கம்; விமல் ஆதங்கம்

பழிவாங்கல் அரசாங்கம்; விமல் ஆதங்கம்
கொள்கலன்களை விடுவித்தவர்களிடம் விசாரணை நடத்தாமல் அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தவரிடம் விசாரணை நடத்துவது பழிவாங்கும் நோக்கத்திலாகும் என்று விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சோதனைக்குட்படுத்தாமல் சுங்கப்பிரிவினர் விடுவித்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய 223 கொள்கலன்கள் தொடர்பில் ஊடகவியலாளர் மாநாட்டில் தான் தெரிவித்த கருத்துத் தொடர்பில் விசாரிப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைத்தனர்.
இந்த அரசாங்கம் பழிவாங்குவதைத் தவிர வேறு எதைச் செய்கிறது. இந்த அரசு பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.