இலங்கை
பால் மாவின் விலையில் மாற்றம் ; வெளியான அறிவிப்பு

பால் மாவின் விலையில் மாற்றம் ; வெளியான அறிவிப்பு
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரித்துள்ளது.
இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்குமென முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன, ஆனால் தற்போது 100 ரூபாவால் அதிகரித்துள்ளது.