Connect with us

பொழுதுபோக்கு

புதிய சீரியலில் ஆல்பா மானசா; பூஜை போட்டோஸ் வைரல்: எந்த சேனல் தெரியுமா?

Published

on

Alya manasa

Loading

புதிய சீரியலில் ஆல்பா மானசா; பூஜை போட்டோஸ் வைரல்: எந்த சேனல் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக, லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர் ஆல்யா மானசா. தனது இயல்பான நடிப்பாலும், துறுதுறுப்பான முகபாவங்களாலும், ரசிகர்களுடன் எளிதில் ஒன்றிப்போகும் தன்மை கொண்ட ஆல்யா ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். இன்று முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.சின்னத்திரையில் நடன நிகழ்ச்சி மூலம் களமிறங்கிய ஆல்யா மானசாவிற்கு விஜய் டிவியில் வரப்பிரசாதமாக அமைந்தது ராஜா ராணி சீரியல். அதில், சஞ்சீவுடன் ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானார்.பின் அப்படியே ராஜா ராணி-2 தொடரில் நடித்தார். அந்த தொடரிலிருந்து பாதியில் வெளியேறியவர் சன் பக்கம் வந்து இனியா என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைய ஆல்யா மானசா அடுத்த தொடர் குறித்து எதுவும் அறிவிக்காமல் இருந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதாவது ஆல்யா மானசா தனது பிறந்தநாள் ஸ்பெஷலாக கமிட்டாகியுள்ள புதிய சீரியல் அறிவிப்பை வெளியிட்டார். ஜீ தமிழில் புதிய சீரியல் கமிட்டானார் என்பதை மட்டும் அறிவித்தார், அதன்பின் எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், ஆல்யா மானசா நடிக்கும் புதிய சீரியலின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் தொடங்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆல்யா மானசாவே தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.https://www.instagram.com/p/DL4Ndi4TPx-/?utm_source=ig_web_copy_linkரசிகர்கள், ஆல்யா மானசாவின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், புதிய சீரியலின் பெயர், கதைக்களம் மற்றும் அவருடன் இணைந்து நடிக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த தகவல்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஜீ தமிழில் ஆல்யா மானசாவின் இந்தப் புதிய பயணம், சின்னத்திரையில் மீண்டும் ஒரு வெற்றியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதியினருக்கு ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும், அர்ஷ் என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சீரியல் படப்பிடிப்புக்கு மத்தியில் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவார். சமூக வலைத் தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா, தனது இன்ஸ்டாகிராம் மற்றும் கணவர் சஞ்சீவ்வுடன் இணைந்து நடத்தும் யூடியூப் சேனல் மூலமாகவும் ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கிறார். குடும்பத்துடன் வெளியிடும் வீடியோ மற்றும் ரீல்ஸ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெறுகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன