இந்தியா
புதுச்சேரியில் இளம் பெண்களுக்கு காசநோய் அறிகுறி அதிகம்: கவர்னர் தகவல்

புதுச்சேரியில் இளம் பெண்களுக்கு காசநோய் அறிகுறி அதிகம்: கவர்னர் தகவல்
புதுச்சேரி மாநிலத்தில் இளம் பெண்களுக்கு காசநோய் அறிகுறி அதிகம் உள்ளது மன வேதனை அளிக்கிறது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் இன்று தெரிவித்தார்புதுச்சேரி அரசு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவு பைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (10.07.2025) நடைபெற்றது. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சத்துணவு பைகளை வழங்கினார்.சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செவ்வேள், தேசிய சுகாதார இயக்கத்தின் தலைவர் டாக்டர் கோவிந்தராஜன், மருத்துவர்கள், மற்றும் சுகாதார மைய ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் கூறுகையில், பாரத பிரதமரின் டி.பி.முக்த் பாரத்(TB Mukt Bharat )திட்டம் நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் புதுச்சேரி மிக சிறப்பாக செயல்பட்டு அதற்கான பாராட்டையும் பெற்றிருக்கிறது.தற்போது காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவு பைகள் வழங்கப்படுகிறது. காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டு அந்த நோய் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபட வேண்டும் என்பதற்காகவே அரசு இத்தகைய முயற்சிகளை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இளம் வயது பெண்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது வருத்தத்தை தருகிறது.இதை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை விரைவுபடுத்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். என்று கூறினார்.பாபு ராஜேந்திரன் புதுச்சேரி