இலங்கை
மின்சார சபையின் மறுசீரமைப்பு கலந்துரையாடல்

மின்சார சபையின் மறுசீரமைப்பு கலந்துரையாடல்
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் மற்றும் வேலைத்திட்டம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்தில் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பது உட்பட தொழிற்சங்கங்களின் கவனத்திற்கு வந்த பல பிரச்சினைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.
மின்சாரத் துறையை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருப்பது அரசாங்கத்தின் கொள்கை என்றும், இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் ஊழியர் உரிமைகளைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அமைச்சர் கூறினார்.
மின்சார சபையின் பிரதிநிதிகள் மற்றும் 42 தொடர்புடைய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் சந்திப்பிற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.