இலங்கை
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தனின் ஆடிவேல் பெருவிழா இன்று

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தனின் ஆடிவேல் பெருவிழா இன்று
இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாக விளங்கும் கதிர்காமக் கந்தப் பெருமானின் வருடாந்த ஆடிவேல் பெருவிழா இன்று நடைபெற உள்ளது.
இதனையொட்டி இன்று மாலை விசேட வீதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் பங்கேற்பார் எனத் தெரிய வருகிறது.
இனம், மதம், மொழிக் கடந்து அனைவராலும் பூஜிக்கப்படும் கதிர்காமக் கந்தனின், வருடாந்த ஆடிவேல் உற்சவத்தில், இன்றைய தினம் மகோற்சவ பெருவிழா இடம்பெறுவதுடன், நாளைய தினம் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.