இலங்கை
விண்வெளியில் சுபான்ஷ் சுக்லா வெந்தயம், பச்சை பயிறு விவசாயம்

விண்வெளியில் சுபான்ஷ் சுக்லா வெந்தயம், பச்சை பயிறு விவசாயம்
அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் விண்கலம் மூலம் சுபான்ஷ் சுக்லா உட்பட நால்வர் ஜுன் மாதம் 26 ஆம் திகதி விண்வெளிக்கு சென்றனர்.
இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகள் செய்து கொண்டிருக்கும் சுக்லா, தனது விண்வெளி பயணத்தின் இறுதிக்கட்டத்தில், அங்கு வெந்தயம், பச்சை பயிறு போன்ற தானியங்களை வளர்த்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாத்திரங்களில் விளைந்திருக்கும் பச்சைப்பயறு மற்றும் வெந்தய விதைகளின் புகைப்படங்களை எடுத்து அவர் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்மூலம் விதை முளைப்பு மற்றும் தாவர வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தை நுண் ஈர்ப்பு விசை எவ்வாறு பாதிக்கிறது? என்பது குறித்த ஆய்வை சுக்லா மேற்கொண்டு உள்ளார்.