Connect with us

இலங்கை

வீடொன்றுக்குள் நிர்வாணமாக நுழைந்த நபர்; அதிர்ச்சியில் அலறிய சிறுவன்

Published

on

Loading

வீடொன்றுக்குள் நிர்வாணமாக நுழைந்த நபர்; அதிர்ச்சியில் அலறிய சிறுவன்

தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, அளுத்கோட தச்சு பாடசாலைக்கு அருகில் உள்ள வாடகை வீடொன்றுக்குள் நிர்வாணமாக நுழைந்த ஒருவர் 19,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவம் நேற்று முனதினம் (08) அ் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டார் தங்கள் இரண்டு குழந்தைகளுடன், வீட்டில் வசித்து வரும் நிலையில் சம்பவம் தினத்தன்று , இரவு உணவு சாப்பிட்டு, இரவு 11 மணியளவில் தாய் படுக்கைக்குச் சென்றுள்ளார்.

Advertisement

மறுநாள் அதிகாலை இளைய மகனுக்கு ஏற்பட்ட தாகத்தையடுத்து தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்குச் சென்ற போது அடையாளம் தெரியாத ஒருவர் கையில் இரண்டு கருப்பு பைகளுடன் நிர்வாணமாக இருப்பதைக் கண்டு சிறுவன் அலறியுள்ளார்.

சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்ட பெற்றோர் உடனடியாக வந்து வீடு முழுவதும் தேடி பார்த்தபோதும் மர்ம நபரை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் வீட்டை சோதனையிட்டு பார்த்த போது படுக்கையறைக்கு அடுத்த அலமாரியில் துணிகள் கலைந்து கிடப்பதைக் கண்டுள்ளதுடன் அதிலிருந்து 19,000 ரூபாய் பணமும் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் திருட்டு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன