சினிமா
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில்..!Baahubali: The Epic’ ரீ-ரிலீஸ் அக்டோபரில்…!

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையில்..!Baahubali: The Epic’ ரீ-ரிலீஸ் அக்டோபரில்…!
இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றியமைத்த ஒரு படம் என்றால் அது பாகுபலி! இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவான இந்த மெகா பிராஜெக்ட் 2015-ல் முதல் பாகமாக வெளிவந்து, 2017-ல் அதன் இரண்டாம் பாகம் வெளியாகி, இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய ஒரு சாதனை படைத்தது. இன்று, அந்த மகத்தான பயணம் 10 ஆண்டுகளை எட்டிய நிலையில், ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.பாகுபலி தொடர் வெளியாகி 10 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி, ‘Baahubali: The Epic’ என்ற தலைப்பில், இரண்டு பாகங்களையும் ஒரே படமாக சேர்த்த ஒரு விசேஷ எடிட்டிங் பதிப்பை உருவாக்கியுள்ளனர். இந்த புதிய ரீ-ரிலீஸ் பதிப்பு வரும் அக்டோபர் 31, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது என்பதை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இந்த புதிய பதிப்பு முழுமையாக டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் செய்யப்பட்டு, 4K மற்றும் ஐமேக்ஸ் தரத்தில் ரசிகர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இரு பாகங்களையும் ஒன்றாக ஒரே ஓட்டமாக காணும் வாய்ப்பு இது தான் முதல் முறை என்பதால், ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இந்த செய்தி வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மிரள்கின்றனர். ‘பாகுபலி ஏன் கட்டினான்?’ என்ற பிரபலமான கேள்விக்குப் பின்னால் இருந்த மர்மம், காதல், துரோகம், வீரா சாகசம் மற்றும் மாபெரும் கிராபிக்ஸ் என அனைத்தையும் ஒரே நேரத்தில் மீண்டும் திரையில் காணும் வாய்ப்பு கிடைப்பது உண்மையிலேயே அற்புதம். என்று ரசிகர்கள் தங்கள் கருத்துககளை தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.