Connect with us

பொழுதுபோக்கு

56 வயதில் சிங்கிள்… எவ்ளோ பெரிய சுதந்திரம் தெரியுமா? திருமணம் பற்றிய கேள்விக்கு எஸ்.ஜே.சூர்யா நச் பதில்!

Published

on

SJ Surya M

Loading

56 வயதில் சிங்கிள்… எவ்ளோ பெரிய சுதந்திரம் தெரியுமா? திருமணம் பற்றிய கேள்விக்கு எஸ்.ஜே.சூர்யா நச் பதில்!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. வில்லன், ஹீரோ என பல கேரக்டர்கில் நடித்து அசத்தி வரும் இவர், தற்போது வரை சிக்கிளாக திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். ஒரு நேர்காணலில் தான் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறியுள்ளார்.பாண்டியராஜன் இயக்கி நடித்த நெத்தியடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில், சிறிய கேரக்டரில் நடித்திருந்த இவர், இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு, அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த்து.அதன்பிறகு விஜய் நடிப்பில் குஷி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா அடுத்து நியூ என்ற படத்தை இயக்கி தானே ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை பெறவே அடுத்து ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யா, வில்லன், குணச்சித்திரம் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார். தற்போது அதிகமாக வில்லன் கேரக்டரில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா கார்த்தியின் சர்தார் 2 படத்தில்வில்லனாக நடித்து வருகிறார்.கடைசியாக, 2015-ம் ஆண்டு இசை என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்த எஸ்.ஜே.சூர்யா 11 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, தற்போது கில்லர் என்ற படத்தை இயக்கி நடிக்க உள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்போது 56 வயதை கடந்துள்ள எஸ்.ஜே.சூர்யா இதவரை திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருந்து வரும் நிலையில், ஒரு நேர்காணலில் தொகுப்பாளர் கோபிநாத் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து பேசியுள்ளார்.சிங்கிளாகவே இருக்கீங்களே இது ரொம்ப பிடிச்சிருச்சா என்று கேட்க, இவ்வளவு பெரிய சுதந்திரத்தை இத்தனை ஆண்டுகள், காத்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய விஷயம். நான் அடைய வேண்டிய இடத்தை அடையவில்லை. அதை நோக்கி ஓடிக்கொண்டு இருப்பதால், திருமணம் பற்றி யோசிக்கவில்லை. நான் நினைப்பது நடக்கலாம் நடக்கமாலும் போகலம். நடந்தால் சந்தோஷம். நடக்கலனாலும் சந்தோஷ்ம். நடக்கும் வரைக்கும் முயற்சி செய்துகொண்டே இருப்பேன். இந்த இடம் கலைத்துறையில் இந்தியாவுக்கு எம்.ஜி.ஆர். என்று கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன