பொழுதுபோக்கு
கயாடு லோகருக்கு கட்டம் சரியில்லையோ? அடுத்தடுத்து கைவிட்டு போன சிம்பு – தனுஷ் படங்கள்!

கயாடு லோகருக்கு கட்டம் சரியில்லையோ? அடுத்தடுத்து கைவிட்டு போன சிம்பு – தனுஷ் படங்கள்!
‘டிராகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த நடிகை கயாடு லோகர், குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் அவரை ‘குயின்’ என உற்சாகமாகக் கொண்டாடினர்.’டிராகன்’ தந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, தமிழ் திரையுலகின் வெளிச்சம் கயாடு லோகர் மீது திரும்பியது. அடுத்தடுத்துப் பல படங்களில் ஒப்பந்தமாகி அவர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.இதயம் முரளி படத்தில் நடிகர் அதர்வாவுடனும், இம்மார்டல் படத்தில் ஜி.வி. பிரகாஷ்ஷுடனும் ஜோடி சேர அவர் ஒப்பந்தமானார். இந்த படங்கள் கயாடுவின் தமிழ் திரையுலகப் பயணத்தில் மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்த வரிசையில், ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்புவின் 49வது படத்திலும், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருந்த படத்திலும் கயாடு லோகர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.இந்த செய்திகள் கயாடு லோகரின் ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்தாக அமைந்தன. குறுகிய காலத்திலேயே அவர் தமிழ் சினிமாவின் ‘குயின்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.ஆனால், விதி வேறு விதமாக எழுதியது போல், கமிட் ஆன உடனேயே வாய்ப்புகள் கைநழுவிப் போயின. சிம்பு மற்றும் தனுஷுடன் அவர் நடிக்கவிருந்த இரண்டு பெரிய பட்ஜெட் படங்களும் கைவிடப்பட்டன. தனுஷ் படத்தில் கயாடு லோகருக்குப் பதிலாக மமிதா பைஜு நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. அதே போல், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படமும் கைவிடப்பட்டது.இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள் கைவிட்டுப் போனது கயாடு லோகருக்கு ஒரு பின்னடைவாக இருந்தாலும், அவர் மனம் தளரவில்லை. தற்போது அவர் மலையாளத் திரையுலகில் டோவினோ தாமஸ்சுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது கயாடு லோகரின் அடுத்த கட்டப் பயணத்திற்கு ஒரு புதிய தொடக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ் சினிமாவில் அவர் மேல் யார் கண் பட்டாதோ தெரியவில்லை, வேகவேகமாக படங்களில் கமிட் ஆகி அந்த படவாய்ப்புகளும் தற்போது கைவிட்டுப்போனது.