Connect with us

பொழுதுபோக்கு

கேட்கும்போது அனுமதி கொடுத்துட்டு, இப்படி பண்றீங்களே; இளையராஜா குறித்து வனிதா விஜயகுமார் காட்டம்

Published

on

vanitha VIjayh

Loading

கேட்கும்போது அனுமதி கொடுத்துட்டு, இப்படி பண்றீங்களே; இளையராஜா குறித்து வனிதா விஜயகுமார் காட்டம்

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி தயாரித்து நாயகியாக நடித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘சிவராத்திரி தூக்கம் ஏது’ என்ற பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாகவும் படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும் என்றும் இளையராஜா வழக்னு தொடர்ந்த நிலையில், வனிதா விஜயகுமார் காட்டமாக பதில் அளித்துள்ளார்.கடந்த 1995-ம் ஆண்டு வெளியான விஜயின் ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், பவர் ஸ்டாருடன் இணைந்து ‘பிக்கப் ட்ராப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதையும் படியுங்கள்: ‘சிவராத்திரி தூக்கம் ஏது’… வனிதாவுக்கு செக் வைத்த இசைஞானி: கடைசி நேரத்தில் வந்த சிக்கல்!தற்போது தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் மிஸஸ் அண் மிஸ்டர். ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ஸ்ரீமன் ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தை, வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் வரும் ஜூலை 11 ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ‘சிவராத்திரி தூக்கம் ஏது’ என்ற பாடல் இடம் பெற்றுள்ள நிலையில், பாடல் இளையராஜா இசையமைத்த ஒரு பாடல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த பாடலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘சிவராத்திரி தூக்கம் ஏது என்ற பாடல், இந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இளையராஜா வழக்கு குறித்து பேசிய நடிகை வனிதா விஜயகுமார், இளையராஜா வீட்டில் நான் ஒரு பொண்ணு மாதிரி. அவரிடம் தனிப்பட்ட முறையில் இந்த பாடலை பயன்படுத்துவது குறித்து பேசிவிட்டேன். இந்த பாடலை எக்கோ ரெக்கார்டிங் கம்பெனியில் இருந்துதான் சோனி மியூசிக் வாங்கினார்கள். சோனி ரெக்கார்டிங் கம்பெனி என் பெரியப்பாவுடையது. அந்த கம்பெனியில் இருந்து தான் பிரச்னை தொடங்கியது. குடும்ப பிரச்னை அதிகம் இருக்கிறது, அதனால் தான் வேண்டுமென்றே அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.இது தவறான ஒன்று. நான் நேரில் சென்று, அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, என் பொண்ணுடன் அவர் காலில் விழுந்துள்ளேன். அவரின் மகள் பவதாரணி எனக்கு உடன்பிறவா சகோதரி. என் சொந்த அப்பாவையே கோர்ட் கேஸ் என்று சந்தித்துவிட்டேன். ஆனால் அவரை நான் தெய்வமாகத்தான் மதிக்கிறேன். அந்த குடும்பத்தில் ஒரு சம்பவம் நடந்தபோது அவர் பையன் நீ என்னை லவ் பண்றியா எங்க அப்பாவை லவ் பண்றீயா என்று கேட்டான் நான் உங்க அப்பாவைத்தான் லவ் பண்றேன் என்று சொன்னேன்.இத்தனை வருடங்கள் நான் இதை யாரிடமும் சொன்னது இல்லை. உண்மையாக நீங்கள் தான் அந்த பாடலுக்கு ஓனர் என்றால், உண்மை என்ன என்று மைக் பிடித்து பதில் சொல்லுங்கள். என்ன உரிமை இருக்கிறது என்று மைக் பிடித்து பேசுங்கள். நான் உரிமையாக கேட்கும்போதே திட்டியிருக்கலமே, இப்போ கேஸ் மட்டும் போடுறீங்களே என்று காட்டமாக கேட்டுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன