இலங்கை
கொழும்பில் மின் கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்!

கொழும்பில் மின் கம்பத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்!
கொழும்பு – கோட்டை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக உள்ள மின் கம்பத்தில் ஏறி, நபரொருவர் போராட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர் இன்று வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் குறித்த மின் கம்பத்தில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மின் கம்பத்தில் ஏறி, போராட்டத்தில் ஈடுபட்ட நபரை மீட்டு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற காரணத்தை பொலிஸார் தெரிவிக்கவில்லை.