இலங்கை
சருமத்தை வெண்மையாக்க க்ரீம்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்க க்ரீம்களை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் பாவனையால் சரும நோய்க்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், 12 ,13 வயது மாணவர்களும் இவற்றை பயன்படுத்துவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான தகவல் மையத்தின் விசேட வைத்திய நிபுணர் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சமூகத்தில் உள்ள பலர் தற்போது சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
போதியளவான தெளிவின்மையால் சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதை விடுத்து இவ்வாறான தரமற்ற களிம்புகளை உபயோகித்து சரும பிரச்சனைகளுக்கு ஆளாகுகின்றனர்.
தோலை வெண்மையாக்கும் கிரீம்களில் தரமற்ற இரசாயங்கள், பாதரசம், ஸ்டீரோய்ட் போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய மூலப்பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனினும் இவை தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை, வைத்தியசாலைக்கு வருகை தரும்போது இணையவழியில் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கின்றனர்.
சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை பயன்படுத்துவதால் நாளடைவில் நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் நரம்பு சார்ந்த நோய்களுக்கு ஆளாகலாம்.
பெண்கள் மாத்திரமல்லாது தற்போது இளைஞர்களும் இவ்வாறன கிரீம்களை பயன்படுத்தி வருகின்றனர். நாட்டில் கிரீம் பாவனை சமூகத்தில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது என்றார்.