இலங்கை
சாரதியின் கவனக்குறைவால் மின்சாரத் தூணுடன் மோதிய பாரவூர்தி!

சாரதியின் கவனக்குறைவால் மின்சாரத் தூணுடன் மோதிய பாரவூர்தி!
குருணாகல் – மல்பிட்டிய தேவாலயத்துக்கருகில் பாரவூர்தி ஒன்று அருகிலுள்ள சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இந்த சம்பவம் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.
மணல் ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அத்துடன் விபத்து காரணமாக அருகில் காணப்பட்ட மின்சாரத் தூணுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது சாரதிக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.