சினிமா
மூஞ்சில இருக்கும் சாஸை…. கிஸ் பண்ணிடு!! பாலச்சந்தர் சொன்னதை அப்படியே செய்த பிரபல நடிகை..

மூஞ்சில இருக்கும் சாஸை…. கிஸ் பண்ணிடு!! பாலச்சந்தர் சொன்னதை அப்படியே செய்த பிரபல நடிகை..
தென்னிந்திய சினிமாவில் 70களின் டாப் நடிகையாக திகழ்ந்து, தற்போது கேரக்டர் ரோல், அம்மா ரோல் என்று நடித்து பிஸியாக இருந்து வருகிறார் நடிகை கீதா. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த கீதா, சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.சமீபத்தில் நடிகை கீதா அளித்த பேட்டியில், இயக்குநர் பாலச்சந்தர் குறித்து ஒருசில தகவலை பகிர்ந்துள்ளார்.அதில் பாலச்சந்தர் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பொசஸிவ்னெஸ் கொண்ட மனைவியாக நடித்தேன். அந்த கேரக்டர், கணவர் மீது அளவுக்கடந்த பாசம், அளவுகடந்த எரிச்சல், அளவுகடந்த சந்தேகம் கொட்டும் கேரக்டர் தான். அப்படத்தில் டைனிங் டேபிளில் தம்பதிக்குள் நடக்கும் சண்டைக்காட்சி தான் பாலச்சந்தருக்கு பிடிக்கும்.அந்த காட்சியில் கணவன் மீதுள்ள கோபத்தில், கேட்க வேண்டிய விஷயத்தை எல்லாம் கேட்டுவிட்டு ஆவேசம் அடங்குவதற்குள் டைனிங் டேபிளில் இருந்த சாஸை எடுத்து கணவன் மீது எறிந்துவிடுவார். இதை பாலச்சந்தரே எதிர்ப்பார்க்கவில்லை.இதை எதிர்பாராத பாலச்சந்தர், அட் சூப்பரா இருக்கு..எக்ஸ்பிரஷன் பண்ணு, அப்படியே அவன்கிட்ட போய் கிஸ் பண்ணி சாஸை நக்கிடு, அப்பத்தான் கோபக்கார கணவரை, சமாதானம் செய்வது போல் இருக்கும் என்று சொல்லிக்கொண்டே நடித்துக்காட்டினார்.ஒரு பக்கம் பாலச்சந்தர் நடித்துக்காட்டி கொண்டிருக்க, அப்படியே நானும் நடித்து அசத்தியதாக கூறியிருக்கிறார் நடிகை கீதா. டைரக்டர்கள் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாலும் நடிகர் நடிகைகளும் தங்களது நடிப்பை வெளிப்படுத்த சொந்தமாக முயற்சிக்க வேண்டும் என்பதிலும் ஊக்கப்படுத்துவார் பாலசந்தர் என்றும் கீதா கூறியிருக்கிறார்.