இலங்கை
வடக்கு, கிழக்கின் இராணுவ ஆக்கிரமிப்பு காணிகள் தொடர்பில் ஐ.நா. வின் பதில்..

வடக்கு, கிழக்கின் இராணுவ ஆக்கிரமிப்பு காணிகள் தொடர்பில் ஐ.நா. வின் பதில்..
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பிலும், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது இலங்கை விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயமும் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உறுப்பினரான ஜேர்மி லோரன்ஸ் (Jeremy Laurence) இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தமது இலங்கை விஜயத்தின் போது வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதாக ஜேர்மி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமான காணிகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.