இலங்கை
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய திருவிழா இனிதே நிறைவு.!

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய திருவிழா இனிதே நிறைவு.!
இலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்று விளங்கும் கதிர்காம கந்தன் ஆலய திருவிழாவானது நிறைவடைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான இந்த திருவிழா ஜூன் 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை 10 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.
தொடர்ச்சியாக 15 நாள்கள் இடம்பெறும் திருவிழாவில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள், ஊர்வலங்கள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுவது வழமையாகும்.
அதுமட்டுமல்லாது கதிர்காம கந்தனின் ஆடிவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பாத யாத்திரையாக கதிகாமத்திற்கு பக்தர்கள் செல்வார்கள்.
யாழ்ப்பாணம் செல்வசன்னதி ஆலயத்தில் இருந்தும் பெருமளவான கந்தன் அடியவர்கள் பாத யாத்திரை கதிகாமத்துக்கு வருடம்தோறும் செல்வதுணடு.
கதிர்காம கந்தனை வழிபாடு செய்வதுடன், கதிர்காம கந்தனின் புனித நதியான மாணிக்க கங்கையிலும் பக்தர்கள் நீராடுவார்கள்.
இம்முறையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது