சினிமா
ஹீரோவிலிருந்து இயக்குநராக கார்த்தியின் புதிய பயணம்! வைரலாகும் அப்டேட் …!

ஹீரோவிலிருந்து இயக்குநராக கார்த்தியின் புதிய பயணம்! வைரலாகும் அப்டேட் …!
தமிழ் சினிமாவில் சில குடும்பங்கள் தலைமுறையாக தங்களது நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளனர். அந்த வரிசையில் நடிகர் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளனர். சிவகுமார் தனது நடிப்பின் நயத்தால் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனிச்சாயலை ஏற்படுத்தியவர். அவரது மகன் சூர்யா, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.இந்நிலையில், “தம்பி எங்கே?” என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக கார்த்தி திரையுலகில் வெற்றிகரமான நுழைவைக் கண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மூலம் அறிமுகமான கார்த்தி, அதே திரைப்படத்திலேயே தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார். கிராமப்புறக் கதையமைப்பும், கார்த்தியின் இயல்பான நடிப்பும் மக்கள் மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தின.அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ், தோழா, காஷ்மோரா, சுல்தான், விருமன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து, தனது தனிப்பட்ட நடிப்பு மார்க்கத்தை உருவாக்கினார். தற்போது சூர்யாவை விட அதிக மவுசு கார்த்திக்கு இருப்பதாகக் கூறும் அளவுக்கு அவர் வளர்ந்து விட்டார்.அதுமட்டுமின்றி, கார்த்தி தற்போது காதல் கதைகளைவிட, சமூகக் கருத்துகள் மற்றும் மனிதநேயம் அடங்கிய திரைப்படங்களை தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளார். இது அவரது சினிமா பயணத்தில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. சூர்யாவுடன் போட்டியின்றி, தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டுள்ளார் கார்த்தி.இந்நிலையில், சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் கார்த்தி இயக்குநராக மாறவிருக்கிறார் என்ற தகவல் பெரிதும் பரவி வருகிறது. இதற்கு பதிலளித்த கார்த்தி, “நல்ல கதை இருந்தால் நிச்சயம் படத்தை இயக்குவேன். முதலில் கதையை தான் பார்ப்பேன். கும்பலாங்கி நைட்ஸ் போன்ற மனதை தொட்ட கதையாக வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் தன் திறமையை செருக விரும்பும் கார்த்தியின் எண்ணம் தெரிகிறது.அதுவும் அவரது இயக்கத்தில், சூர்யா நடிக்கும் படமொன்று உருவாகப்போகிறது என்ற தகவலும் இணையத்தில் பரவி வருகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், சினிமா ரசிகர்களுக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.