பொழுதுபோக்கு
35 வருடம், 5000-க்கு மேல் படங்கள்; அமலா முதல் நதியா வரை பல நடிகைகளுக்கு குரல் கொடுத்த பிரபல இயக்குனர் மனைவி

35 வருடம், 5000-க்கு மேல் படங்கள்; அமலா முதல் நதியா வரை பல நடிகைகளுக்கு குரல் கொடுத்த பிரபல இயக்குனர் மனைவி
சினிமாவை பொறுத்தவரை ஒரு புதுமக நடிகர் அல்லது நடிகை நடிக்க வருகிறார்கள் என்றால், திரையில் அவர்கள் சொந்த குரலில் பேசுவது என்பது பெரும்பாலும் முடியாத ஒன்றாக இருக்கும். கேப்டன் விஜயகாந்த் கூட ஆரம்பகாலத்தில் தனது படங்களில் வேறொரு டப்பிங் கலைஞரை பயன்படுத்தியுள்ளார். அதேபோல் அஜித்க்கு எம்.எஸ்.பாஸ்கர் குரல் கொடுத்துள்ளார். விக்ரம் டப்பிங் கலைஞராகத்தான் சினிமாவில் நுழைந்துள்ளார்.நடிகர்கள் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகர்களாக மாறிவிட்டால் தங்கள் படங்களுக்கு தானே குரல் கொடுப்பார்கள். ஆனால் நடிகைகளை பொறுத்தவரை அவர்கள் தங்கள் சொந்த குரலை திரைப்படங்களில் பயன்படுத்துவது என்பது கடினம் தான். தேவயானி முதல் இன்றைய நயன்தாரா வரை உள்ள பல்வேறு நடிகைகளுக்கு திரையில் அவர்கள் சொந்த குரலில் பேசிய படங்கள் இல்லை என்று சொல்லலாம். அப்படி என்றால் இவர்களுக்கு யார் குரல் கொடுக்கிறார்கள் என்ற கேள்வி வரும்.நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுக்க பல முன்னணி டப்பிங் ஆர்ட்டிஸ்கள் இருக்கிறார்கள். நடிகை ரோஹினி, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் பல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளனர். அந்த வகையில், ஒரு பிரபல இயக்குனரின் மனைவி தூரல் நின்று போச்சு சுலோக்சனா முதல் நடிகை நதியா வரை பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார். அந்த டப்பிங் கலைஞர் வேறு யாரும் இல்லை. இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் மனைவி துர்கா.35 வருடங்களாக 5000-க்கு மேற்பட்ட படங்களில் நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ள துர்கா, நான் இதை ஒரு பொழுதுபோக்காத்தான் செய்தேன். அதன்பிறகு இதுவே எனது வாழ்க்கையாக மாறிவிட்டது. எனக்கு ஃபோர் அடித்தால் நான் அடுதது செய்யும் முதல் வேலை டப்பிங் தான். ஆனால் இதுவே என் தொழில் ஆகும் என்று நினைக்கவில்லை. ஆனால் டப்பிங் எனக்கு ரொம்ப பிடிக்கும். பாக்யராஜ் சார் படமான தூரல் நின்னு போச்சு படத்தில் சுலோக்ஜனாவுக்கு தான் முதன் முதலில் டப்பிங் பேசினேன்.இந்த படத்தில் எனக்கு முன்னதாக பலர் பேசியிருந்தார்கள். நானும் குரல் தேர்வுக்காக சென்றிருந்தேன். டெஸ்ட் எடுத்துவிட்டு அனுப்பிவிட்டார்கள். அதன்பிறகு 2-3 நாட்கள் கழித்து போன் வந்தது. உங்கள் குரல் தான் செலக்ட் பண்ணிருக்காங்க என் சொன்னார்கள். அன்று தொடங்கியது என் டப்பிங் பயணம் என்று கூறியுள்ளார். அதன்பிறகு, விதி படத்தில் பூர்ணிமா, மம்முட்டி நடித்த கிளி பேச்சு கேட்கவா படத்தில் கனகாவுக்கு டப்பிங் பேசியுள்ள, துர்கா பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.அதன்பிறகு இவரது கணவர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான மெல்ல திறந்தது கதவு திரைப்படத்தில் அமலா மற்றும் ராதா இருவருக்கும் டப்பிங்கில் வித்தியாசம் காட்டியிருப்பார். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினியின் அம்மாவாக நடித்த சாரதா, அவரது காதலியாக நடித்த அம்பிகா இருவருக்கும் குரல் கொடுத்துள்ள துர்கா, டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் பூர்ணிமா, அம்மன் படத்தில் வரும் குழந்தை, முந்தானை முடிச்சு ஊர்வசி, சின்னவீடு, சக்ரி டோலக்டி, உள்ளிட்ட பல நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்தவர் தான் துர்கா. குஷ்பு உள்ளிட்ட பல நடிகைகளின் முதல் படத்திற்கு இவர் தான் டப்பிங் கொடுத்துள்ளார்.