சினிமா
அஜித் குமார் மரணம் நீதிக்காக ஆர்ப்பாட்டம்!விஜய் பங்கேற்பு உறுதி!2,000 போலீசார் பாதுகாப்பு!

அஜித் குமார் மரணம் நீதிக்காக ஆர்ப்பாட்டம்!விஜய் பங்கேற்பு உறுதி!2,000 போலீசார் பாதுகாப்பு!
திருப்புவனம் அஜித் குமார் மரணத்துக்காக நீதிகோரி, மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் நிலையங்களில் ஏற்பட்ட 24 மரணங்கள் குறித்து உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதற்காக “தமிழக வெற்றி கழகம்” சார்பில் ஜூலை 13, 2025 அன்று சென்னையில் உள்ள சிவானந்த சாலையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் அவர்கள் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பங்கேற்பை ஒட்டி சென்னை காவல் துறை பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தில் 6000 முதல் 7000 பேர்வரை பங்கேற்கலாம் என சென்னை காவல்துறை கணிப்பிட்டுள்ளது. இதற்கமைய, 2000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறு மொத்தம் 16 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், விஜய் அவர்கள் காலை 10 மணிக்குள் நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிர்வாகிகள் மற்றும் பங்கேற்பாளர்களுக்காக வாகனங்களை நிறுத்த மெரினா லூப் சாலை மற்றும் தீவுத் திடல் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றங்கள், நிலையை பொறுத்தே செய்யப்படும் எனவும், திருவள்ளிக்கேனி மற்றும் சிவானந்த சாலையில் முழு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, சென்னையிலிருந்து மட்டுமே நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்க வேண்டும் எனவும், மாவட்டங்களிலிருந்து கூடுதல் மக்களை அழைத்து வரக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பல மாவட்ட நிர்வாகிகள் இன்றே சென்னையில் தங்கியுள்ளனர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.