இலங்கை
அதிகாரியின் விரலைக் கடித்து தப்பியோடிய சந்தேகநபர்!

அதிகாரியின் விரலைக் கடித்து தப்பியோடிய சந்தேகநபர்!
(ஆதவன்)
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக சோதனையிடச் சென்ற பொலிஸ் பரிசோதகரின் விரலைக் கடித்துவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார். ருவன்வெல்ல, அட்டுலுகம் பிரதேசத்தில் ஈஸிகேஸ் முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றார் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனையிடச் சென்ற போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சந்தேக நபர், பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த பொலிஸ் பரிசோதகர் கரவனெல்ல ஆதாரமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். (ச)