Connect with us

உலகம்

அமெரிக்கா விடுத்த அதிரடி எச்சரிக்கை!

Published

on

Loading

அமெரிக்கா விடுத்த அதிரடி எச்சரிக்கை!

காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் இராணுவ ஒத்துழைப்பை இரத்து செய்ய நேரிடும் என இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வந்து அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என சர்வதேச நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

Advertisement

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அதற்கு மறுப்பு தெரிவித்து வருவதோடு, தங்கள் நாட்டின் பணையக் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்படும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ள நிலையில், காசாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் இராணுவ ஒத்துழைப்பும் இரத்து செய்யப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதேவேளை மேற்குக்கரையில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட யூத அமைப்புகள் மீது பிரித்தானியாவும் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

ஆகவே, இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பிரித்தானிய நிதியமைச்சர் டேவிட் லாமி மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தும் யூத குடியேற்றவாசிகள் மற்றும் தீவிர வலதுசாரி அமைப்புகள் மீது இஸ்ரேல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன