சினிமா
அம்மாவாக வேண்டும் என விரும்பி இருக்கிறேன்.. குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பேசிய கமல் மகள் ஸ்ருதி ஹாசன்

அம்மாவாக வேண்டும் என விரும்பி இருக்கிறேன்.. குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பேசிய கமல் மகள் ஸ்ருதி ஹாசன்
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். நடிகர் கமல் ஹாசனின் மகளான இவர் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கதாநாயகியாக நடித்து வருகிறார்.நடிகை ஸ்ருதி ஹாசன் இதற்கு முன்பு பலமுறை காதல் தோல்விகளை சந்தித்து இருக்கிறார். திருமணம் செய்யும் முடிவு வரை சென்றாலும் காதல் தோல்வியில் முடிந்திருக்கிறது. ஆனால் அந்த காதல் தோல்விக்கு நான் காரணம் அல்ல என ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து பேசியுள்ளார். இதில் அவர் “நான் எப்போதுமே அம்மாவாக வேண்டும் என விரும்பி இருக்கிறேன். ஆனால், சிங்கிள் Parent-ஆக இருக்க நான் விரும்பவில்லை.ஒரு குழந்தை இரண்டு பெற்றோர் ரொம்ப முக்கியம். இரண்டு பெற்றோர் இருந்தால் அது சிறந்ததாக இருக்கும். சிங்கிள் Parents-ஆக இருப்பவர்களை நான் அவமானப்படுத்தவில்லை. நான் தத்தெடுக்கலாம் என்று கூட நினைக்கிறன்” என கூறியுள்ளார்.