இலங்கை
இலங்கையின் முக்கிய சுற்றுலா தளமொன்றில் தீப்பரவல்

இலங்கையின் முக்கிய சுற்றுலா தளமொன்றில் தீப்பரவல்
எல்ல பகுதியில் கட்டுமானத்தில் இருந்த சுற்றுலா விடுதி ஒன்று தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளது.
எல்ல கண்டகும்புராவில் உள்ள ஒரு புதரில் ஏற்பட்ட தீ விபத்தில் சுற்றுலா விடுதி தீப்பிடித்ததாகவும், காற்று காரணமாக வேகமாக பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் கடும் காற்றின் காரணமாக பரவிய தீ அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பொலிஸார், தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் தலையீட்டால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.