இலங்கை
கள்ளக்காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் ; கணவனை கண்டு தப்பியோடிய மனைவி

கள்ளக்காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் ; கணவனை கண்டு தப்பியோடிய மனைவி
கள்ளக்காதலனுடன் ரூம் போட்டு பிறந்தநாள் கொண்டாடிய மனைவி கணவனை கண்டதும் சுவரேறி குதித்து தப்பியோடிய தப்பியோடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது
தற்போது இந்தியாவில் ஓயோ அறைகள் குறைந்த வாடகையில் இருப்பதால் இளைஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தநிலையில் கள்ளக்காதலனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஓயோ ரூமில் உல்லாசமாக இருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ஓயோ ஓட்டலில் திருமணமான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் ஹோட்டல் அறையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
அதன்பிறகு அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போது, அப்பெண்ணின் கணவர் 2 குழந்தைகளுடன் அங்கு வந்தநிலையில் இதனையறிந்த அந்த பெண் அறைகுறை ஆடையுடன் ஹோட்டல் மதில் சுவரை ஏறி குதித்து தப்பி ஓடினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
மேலும் கள்ளக்காதல் வன்முறைகள் இந்தியா முழுவதிலுமே அதிகமாகி கொண்டிருப்பதால், அதுதொடர்பான குற்றங்களும் அதிகரித்து வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.