இலங்கை
கிளிநொச்சி மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இரண்டாவது காணிப்பயன்பாட்டு திட்டமிடல் குழுக் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயல மாநாட்டு மண்டபத்தில் 11.07.2025 அன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழுவின் தலைவருமான S.முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு பச்சிலைப்பள்ளிபிரதேச சபையின் தவிசாளரால் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தின் அரச மற்றும் LRC காணிகளுக்கான ஆவணம் வழங்கும் நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும்
இயக்கச்சி விநாயகபுரம் பகுதியில் காணப்படும் காணி முரண்பாடுகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப் பட்டது.