உலகம்
கென்யா வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கென்யா வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
கென்யாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளதாகவும் மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல நகரங்கள் அங்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்ற நிலையில் மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதனால் மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் நைரோபியில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் சேதமடைந்தது தடுப்புச்சுவர் இடிந்து அருகில் உள்ள குடியிருப்புக்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் அங்கு சுமார் 1½ லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனா். எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதுடன் மீட்பு பணிகள் தொடா்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)