உலகம்
கைதிகளை விடுவிக்கிறது பிரிட்டனின் புதிய அரசு

கைதிகளை விடுவிக்கிறது பிரிட்டனின் புதிய அரசு
பிரிட்டனில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தொழிற்கட்சி, சிறைகளில் கூட்ட நெரிச லைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான கைதி கள் விடுவிக்கப்படுவர் என்று அறிவித் துள்ளது.
கடந்த14ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி சிறைகளைக் கண்டு கொள்ளவில்லை என்றும் அவற்றுக்குப் போதுமான நிதியை ஒதுக்கவில்லை எனவும் புதிய பிரதமர் கியர் ஸ்டாமர் தலைமையின்கீழ் செயற்படும் தொழிற்கட்சி கடந்த காலத்தில் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தது.
பிரிட்டனில் உள்ள சில சிறைச்சாலைகள்மிகவும் பழமைவாய்ந்தவை என்றும் அவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது. “சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் உள்ளனர். தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த முதல் ஒரு வாரத்திலேயே புதிய சிறைச்சாலை ஒன்றைக் கட்டிமுடிக்க முடியாது. இதற்கான நீண்டகால தீர்வு அவசியம்” என பிரதமர் ஸ்டாமர் கூறியுள்ளார். கியர்ஸ்டாமரின் இந்த அறிவிப்பால் விடுதலையாகவுள்ள கைதிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், பிரதமருக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர். (ச)