சினிமா
சாலை விபத்தில் சிக்கிய பிரபல பாடகி

சாலை விபத்தில் சிக்கிய பிரபல பாடகி
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகியும் பின்னணி குரல் வழங்குபவருமான சின்மயி நேற்று தான் சாலை விபத்தில் சிக்கியுள்ளதாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குழந்தைகளுடன் சின்மயி காரில் சென்றபோது குடிபோதையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் வந்து மோதியதாகவும் இதனை தொடர்ந்து குறித்த முச்சக்கர வண்டி இடித்துவிட்டு நிற்காமல் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் தனக்கோ அல்லது தன் உடன் இருந்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றும் தாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மிகவும் முக்கியமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.