Connect with us

இலங்கை

சித்தரவதைக்குட்படுத்தி 500 அடி பள்ளத்தில் வீசப்பட்ட இளைஞன்

Published

on

Loading

சித்தரவதைக்குட்படுத்தி 500 அடி பள்ளத்தில் வீசப்பட்ட இளைஞன்

தாக்கி கொல்லப்பட்டு மடுல்சீமை சிறிய உலக முடிவு பகுதியில் 500 அடி பள்ளத்தில் வீசப்பட்டதாக கூறப்படும் இளைஞனின் சடலம் குடோ ஓயா இராணுவ கமாண்டோ உறுப்பினர்களால் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

ஹாலிஎல ரொசவத்தையைச் சேர்ந்த 22 வயதுடைய விவேகானந்தன் சூரியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மூன்று கமாண்டோக்கள் கயிறுகளின் உதவியுடன் பள்ளத்தில் இறங்கி மோசமாக சிதைவடைந்திருந்த உடலை மேலே கொண்டு வந்ததாக  தெரிவிக்கப்படுகின்றது. இந்த தேடுதல் நடவடிக்கையில் 10 கமாண்டோக்கள்இ இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

கொலை செய்யப்பட்ட இளைஞர் ஹாலிஎல பிரதேசத்தில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுரியும் திருமணமாகாதவர் எனவும் கடந்த 30ஆம் திகதி திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டிலிருந்து சென்ற மகன் பல நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என உயிரிழந்த இளைஞனின் தந்தை கடந்த 6ஆம் திகதி ஹாலிஎல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார் நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு  சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.

சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சடலத்தை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டநிலையிலேயே சடலம் நேற்றயதினம் கண்டபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன