Connect with us

பொழுதுபோக்கு

சொல்லிட்டு வெளியே போனவன் நான்; அவரை பற்றி பேச வேண்டாம்: விஜயகாந்த் குறித்து அருண் பாண்டியன் பேச்சு!

Published

on

Vijayakanth and Arun Pandian

Loading

சொல்லிட்டு வெளியே போனவன் நான்; அவரை பற்றி பேச வேண்டாம்: விஜயகாந்த் குறித்து அருண் பாண்டியன் பேச்சு!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆக்‌ஷன் ஹீரோக்களை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். விஜயகாந்த், அர்ஜூன் போன்ற பலரை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இந்த வரிசையில் நடிகர் அருண் பாண்டியனுக்கும் முக்கிய இடம் இருக்கிறது.அந்த வகையில், ‘இணைந்த கைகள்’, ‘சிதம்பர ரகசியம்’, ‘ஊமை விழிகள்’, ‘கோட்டை வாசல்’, ‘ஊழியன்’, ‘ராஜ முத்திரை’ போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் ‘அஃகேனம்’ என்ற படத்தில் தனது மகளான கீர்த்தி பாண்டியனுடன் சேர்த்து இவர் நடித்துள்ளார்.நடிகர் மட்டுமல்லாமல் மறைந்த விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க-வில் அருண் பாண்டியன் அங்கம் வகித்தார். இந்நிலையில், நியூஸ் க்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், தே.மு.தி.க-வில் இருந்து விலகியது குறித்து அருண் பாண்டியன் தெரிவித்துள்ளார்.அதன்படி, “விஜயகாந்திடம் இருந்து நேர்மை என்ற ஒரு விஷயத்தை நாம் கற்றுக் கொள்ளலாம். பலரது நற்குணங்களை பணம் மாற்றி விடும். சிலரது குணத்தை பதவி மாற்றி விடும். இவை தவிர சிலரது குணத்தை புகழ் மாற்றி விடக் கூடும்.ஆனால், விஜயகாந்தை பொறுத்தவரை அவரது சூழ்நிலை மட்டும் தான் அவரை நிலைகுலையச் செய்தது. அவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரை நான் சினிமாவில் பார்த்தது கிடையாது. இதற்கு மேலும் அவரை போன்ற ஒரு மனிதரை நான் சினிமாவில் பார்க்க போவது இல்லை.இதனை மிக உறுதியாக நான் கூறுகிறேன். அவருடைய கட்சியில் இருந்து வெளியேறிய போது, அவரிடம் சொல்லி விட்டு வந்த ஒரே நபர் நான் மட்டும் தான். என் மீது மிக அன்பாக இருந்த நபர் விஜயகாந்த். அது காலத்தின் கட்டாயம். அந்த விஷயங்களை அப்படியே விட்டு விடுங்கள்” என அருண் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன