இலங்கை
பைலட்களின் உரையாடல் ; அஹமதாபாத் விமான விபத்தில் திருப்புமுனை

பைலட்களின் உரையாடல் ; அஹமதாபாத் விமான விபத்தில் திருப்புமுனை
அஹமதாபாத்திலிருந்து கிளம்பிய AI 171 எனும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், தன் புறப்பாட்டின் ஆரம்பத்திலேயே மர்மமான முறையில் இயந்திரங்களை முடக்கியது தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.
சமூகவலைத்தளப்பதிவில் வெளியான பதிவொன்றில் குறிப்பிட்டப்பட்ட விடயமானது,
விமானம் தரையிலிருந்து எழுந்தவுடன், அதற்குத் தேவைப்படும் 180 knots IAS வேகத்தை எட்டியது.
ஆனால், அதனைத் தொடர்ந்து 1 விநாடி இடைவெளியில், விமானத்தின் என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2-க்கு எரிபொருள் வழங்கும் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் RUN நிலையில் இருந்து CUTOFF நிலைக்கு மாற்றப்பட்டன.
இதனால், இரு என்ஜின்களும் எரிபொருள் இல்லாமல் செயலிழந்தன.
விபரீதமான இந்த மாற்றத்திற்கு cockpit voice recorder-ல் பைலட்களுக்கிடையே நடந்த உரையாடல் ஒரு முக்கியமான சாட்சியாக இருக்கிறது.
அதில் ஒருவர் கேட்டது, “நீ ஏன் எரிபொருளை நிறுத்தினாய்?” என்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மறுமுனை பைலட் “நான் செய்யவில்லை!” என்று பதிலளிக்கிறார்.
இந்த பிழை திட்டமிட்டதா அல்லது தற்செயலா என்பது தற்போதும் பரிசீலனையில் உள்ள நிலையில், விமானத்திலிருந்த பயணிகள் உயிர் தப்பியதுதான் ஒரு அதிசயம் என குறிப்பிடப்படுகிறது.
விமானத்தின் First Officer (முதலாவது துணை பைலட்) க்கு மொத்தம் 1100 மணி நேர பறக்கும் அனுபவமே இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச சாசனங்களின்படி, இத்தகைய விமானங்களை இயக்க குறைந்தபட்சம் 1500 மணி நேர அனுபவம் வேண்டும் என்பது நிலையான நடைமுறையாக இருக்கின்ற போதும், இந்தியாவில் எவ்வாறு இந்த தளர்வுகள் ஏற்படுகின்றன என்பது விவாதத்திற்குரிய கேள்வி.
விமானத்துறையில் வேகமான வளர்ச்சி, மற்றும் தகுதியான பைலட்களின் பற்றாக்குறை காரணமாக, Directorate General of Civil Aviation (DGCA) தரத் தேவைகளை தளர்த்தியிருக்க வாய்ப்பு உள்ளது. இது பயணிகள் பாதுகாப்பை நேரடியாக பாதிக்கும் ஒரு கவலையான நடைமுறையாக பார்க்கப்படுகிறது.
இந்த விசாரணை அறிக்கை, இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தரங்களை மீளாய்வு செய்யத் தேவையுள்ளதாகவும், DGCA மேலும் பொறுப்புடன் தன் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.