இலங்கை
மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை ; பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரிக்கை

மட்டக்களப்பில் கையெழுத்து வேட்டை ; பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரிக்கை
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறுக் கோரி மட்டக்களப்பில் இன்று கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
மட்டக்களப்பு பேருந்து தரப்பிடம் முன்பாக, முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், பயங்கரவாத தடைச் சட்டம் குறித்தும், மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
ஒடுக்கு முறைகளுக்கு உட்பட்டு அகதிகளாக வாழ்கிற வாழ்க்கை இனிவரும் காலங்களிலும் வரக்கூடாது என்றும் தேசிய பிரச்சினைக்கான தீர்வும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.