இலங்கை
மலையகப் பாடசாலைகளுக்கு ரூ. 300 மில். இந்தியா உதவி

மலையகப் பாடசாலைகளுக்கு ரூ. 300 மில். இந்தியா உதவி
மலையகப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கென இந்திய அரசு 300 மில்லியன் ரூபாவை மேலதிகமாக வழங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு மலையகப் பாடசாலைகளின் அபிவிருத்திக்கென இந்திய அரசு 300 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மூலப்பொருள்களின் விலை அதிகரித்தமையால் இந்தத் திட்டம் தடைப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை பூரணப்படுத்துவதற்காக தற்போது இந்திய அரசு 300 மில்லியன் ரூபாவை மேலதிகமாக வழங்கியுள்ளது.(ச)