Connect with us

உலகம்

மியன்மாரில் இராணுவ தாக்குதலால் குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு!

Published

on

Loading

மியன்மாரில் இராணுவ தாக்குதலால் குழந்தைகள் உட்பட 23 பேர் உயிரிழப்பு!

2021ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக்குப் பின் சகாயிங் பகுதியில் உள்ள லின்டாலு கிராம புத்த மடாலயம்  மியன்மாரின் தீவிரமடைந்த உள்நாட்டுப் போரில், 

இராணுவ வான்வழி தாக்குதலுக்கு இலக்கானது இதில்  தஞ்சம் புகுந்திருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

மேலும் 30 பேர் காயமடைந்த நிலையில், 10 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அந்த பிராந்தியத்தில் போராடி வரும் எதிர்ப்பு முன்னணிக்கு எதிராக இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உயிர் பிழைப்பதற்காக ஏராளமான மக்கள் அந்த மடாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர். 

போருக்கு மத்தியிலுள்ள பொதுமக்கள் மீதான இந்த தாக்குதல் சர்வதேச அமைப்புகளிடையே அதிர்வலை எழுப்பியுள்ளது. 

Advertisement

புத்த மடாலயத்தில் தங்கியவர்கள் மீது இராணுவம் நடத்திய கொடூர தாக்குதல் மியன்மார் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன