இலங்கை
மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து பலியான கட்டுமானத் தொழிலாளி ; விசாரணைகள் தீவிரம்

மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து பலியான கட்டுமானத் தொழிலாளி ; விசாரணைகள் தீவிரம்
கண்டியில் கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹடபிட்டிய பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து கட்டுமானத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கம்பளை 58 வயதுடைய கட்டுமானத் தொழிலாளி ஆவார்.
இவர் கட்டிட பணிகளில் ஈடுபட்டிருந்த போது கால் தவறி கீழே விழுந்துள்ள நிலையில் ஏனைய தொழிலாளிகளின் உதவியுடன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.