சினிமா
வரதட்சணை வேண்டாம்..அப்படி இருன்னு சொன்ன மாமனார்!! அட்ஜெஸ்ட் பண்ணிக்கோன்னு சொன்ன கணவர்!! தமிழா தமிழா..

வரதட்சணை வேண்டாம்..அப்படி இருன்னு சொன்ன மாமனார்!! அட்ஜெஸ்ட் பண்ணிக்கோன்னு சொன்ன கணவர்!! தமிழா தமிழா..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தமிழா தமிழா. விவாத நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.வரும் ஞாயிறு 13 ஆம் தேதியின் எபிசோட்டில் இன்றைய சூழலில் வரதட்சனை மணப்பெண் வீட்டார் Vs மணமகன் வீட்டார் என்ற தலைப்பில் விவாதம் நடந்துள்ளது.அப்போது ஒரு பெண் எனக்கு 20 வயதில் திருமணம் ஆனது, காதல் கல்யாணம் தான், என் மாமனார் என்னை கூப்பிட்டு, உங்க வீட்டில் எதுவும் செய்யவேண்டாம், நானே அதை செய்கிறேன். ஆனால் எனக்கு என்ன தேவையோ, அதை நிறைவேற்றிக்கொடு என்றார். இதனால் அதிர்ச்சியான ஆவுடையப்பன், என்னங்க சொல்றீங்க என்று அதிர்ச்சியுடன் கேட்டுள்ளார்.அதற்கு அந்த பெண், நேரடியாகவே, ஒரு ஆம்பளக்கு என்ன தேவை, அதைத்தான் நான் உன்னிடம் கேட்கிறேன் என்று சொன்னார். இதை என் கணவரிடம் சொன்னால், அவர் அப்படித்தான் பேசுவாரு நீ அட்ஜெஸ்ட் பண்ணிக்கோன்னு சொன்னாரு என்று கூறியிருக்கிறார் அப்பெண்.இதை கேட்டு அரங்கமே அதிர்ச்சியாகியுள்ளது. இதன் பிரமோ வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு பலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.