இலங்கை
30 வருடங்களுக்கு தனி நாடு நடத்திய இனம்! அர்ச்சுனா அதிரடி (வீடியோ இணைப்பு)

30 வருடங்களுக்கு தனி நாடு நடத்திய இனம்! அர்ச்சுனா அதிரடி (வீடியோ இணைப்பு)
வேலைவாய்ப்பு விடயத்தில் உள்வாரி பட்டதாரிகள் பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றனர் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நிலையியல் கட்டளை 27/2இன் கீழ் கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர் மேலும் உரையாற்றுகையில்,
2014 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சிறப்பு சித்திகளுடன் பல்கலைக்கழகம் நுழைந்த நாங்கள் 2019 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் ஸ்திர தன்மை அற்ற காரணங்களாலும் பல்வேறு அரசியல் காரணங்களாலும் முறைகேடாக வழங்கப்பட்ட அரசாங்க நியமனங்களினால் 2020 ஆம் ஆண்டு ஆவணி மாதம் அளவில் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்பினை இழந்து நிற்கின்றோம்.
இதன் மூலம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து சிறப்பு சித்திகள் மூலம் விசேட பொதுபட்டம் வென்ற மாணவர்களும் அதேநேரம் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலை படங்களில் இருந்து எங்களுடைய சக ஆண்டு மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எங்களுடைய பல்கலைக்கழக கற்கை நெறியானது அரசாங்கத்தின் செயல்பாட்டு குறைவினால் தாமதமாக்கப்பட்டது என்பதனை ஒத்துக்கொண்டு யாழ் பல்கலைக்கழகம் கடிதம் மூலம் தெரிவித்திருப்பது மட்டுமல்ல 2024 ஆம் ஆண்டு தாங்கள் தேர்தலில் நின்ற போது எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எங்களுக்கு வாக்குறுதி அளித்ததன் காரணமாக உங்களை நாங்கள் பாராளுமன்றம் அனுப்பி வைத்தோம்.
தற்போதைய ஜனாதிபதி உட்பட தாங்களும் எங்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கி இருந்தீர்கள் அண்மைய தினத்தில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 1756 பட்டதாரி மாணவர்களுக்கு சிறப்பு அடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் தீர்மானிக்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அரசாங்கத்தினால் சொல்லப்பட்டது.
ஏற்கனவே மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் ஒரு உயர் கல்வியை முடித்து அதன் பின்னர் வருடக் கணக்காக எங்களுடைய முதலாவது நியமனத்திற்காக காத்திருக்கும் நாங்கள் மீண்டும் ஒரு பரீட்சை ஒன்றை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அதே நேரம் தங்களுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் அதிபராக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறுக்கு வழியில் நியமனங்களை பெற்றுக் கொடுக்க முனைவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அதே நேரம் மேல் மாகாணத்தில் அரசாங்க பட்டதாரிகள் அல்லாத தனியார் பட்டதாரிகளுக்கு தாங்கள் வேலை வாய்ப்பினை வழங்கியிருப்பது இந்த நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான ஊழல் தொடர்பான செய்தியாக போய் சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அவ்வாறான முறையற்ற நியமனங்களை இந்த அரசாங்கம் வழங்குகின்ற அதே சந்தர்ப்பத்தில் உள்வாரி பட்டதாரிகள் ஆகிய நாங்கள் வருடக் கணக்காக பொய் வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம்
ஆகவே பொறுப்பு மிக்க அமைச்சர் என்ற அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்குரிய வினாக்களை இந்த உயரிய சபைக்கு தங்களால் வழங்க முடியுமா?
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கத்தால் வேலை வாய்ப்புகள் நிரந்தரமாக வழங்கப்பட்டிருந்ததா? ஆம் எனில் எத்தனை வேலை வாய்ப்புகள் எந்தெந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன?.
2014 ஆம் ஆண்டு பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்கு உள்வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் பேராதனை மற்றும் மட்டக்களப்பு பொது விசேட பட்டதாரிகளுக்கு அந்த நியமனத்தில் உள்வாங்கல்கள் நடந்ததா அப்படியான் எத்தனை மாணவர்கள் உள்வாங்கப்பட்டார்கள்?
வட மாகாணத்தில் இருக்கின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு வடமாகாண ஆளுநருக்கு அதிகாரங்கள் இருந்த போதும் அவரை தொடர்பு கொண்ட போது மத்திய அமைச்சின் செயலாளர் அது தொடர்பாக தீர்மானிப்பார் என்றும் கபினட் அனுமதி தேவை என்றும் சொல்லி இருக்கிறார் அதேவேளை வடமாகாண செயலாளர் இருக்கின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? என்றார்
லங்கா4 (Lanka4)
அனுசரணை