சினிமா
6 பிசினஸ்!! விஜே பார்வதியின் ஒரு மாத வருமானம் இத்தனை லட்சமா

6 பிசினஸ்!! விஜே பார்வதியின் ஒரு மாத வருமானம் இத்தனை லட்சமா
யூடியூப் சேனல் மூலம் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விஜே பார்வதி. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.சமீபத்தில் தன்னுடைய பதிவுக்கு மோசமான கருத்துக்களை கூறி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது உங்கள் மாத வருமானம் என்ன, எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதற்கு பார்வதி, நான் கொஞ்சம் அதிகமாக தான் செலவு செய்வேன். எனக்கு மாதம் 65 ஆயிரம் மட்டுமே செலவாகிறது. அப்போ, வரவு அதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு வரும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.நான் கண்டண்ட் கிரியேட்டர். படங்களில் இருந்து, யூடியூப்பில் இருந்து, இன்ஸ்டாகிராமில் இருந்து, விளம்பர வீடியோக்களில் இருந்து, குரூப் டிரிப்ஸ்களில் இருந்து என்று பல விஷயங்கள் மூலம் சம்பாதிக்கிறேன்.கிட்டத்தட்ட 6 பிசினஸ் செய்கிறேன் அதிலிருந்து வருமானம் வருகிறது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.