Connect with us

பொழுதுபோக்கு

ஃபேஷன் ஷோக்களால் கடன் பிரச்னை – பிரபல மாடல் அழகி விபரீத முடிவு

Published

on

puducherry modal

Loading

ஃபேஷன் ஷோக்களால் கடன் பிரச்னை – பிரபல மாடல் அழகி விபரீத முடிவு

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) சிறிய வயதில் புற்றுநோய் காரணமாக தனது தாயை இழந்தார். முழுக்க முழுக்க தந்தையின் அரவணைப்பில் அவர் வளர்ந்தார். கருப்பு நிறம் என பலர் அவரை ஒதுக்கிய நிலையில் விடா முயற்சியால் மிஸ் பாண்டிச்சேரி 2020-2021, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019 என பல டைட்டில்களை ஜெயித்தார். பல்வேறு அழகு போட்டியில் பல்வேறு விருதுகளைப் பெற்ற சான் ரேச்சல் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு மாடலிங் பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்துள்ளார்.கடந்த ஆண்டு சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு 100 அடி சாலையில் வசித்து வந்தார். பேஷன் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் 6-ம் தேதி தனது தந்தை வீட்டுக்கு வந்த ரேச்சல், அங்கு அதிக அளவில் தூக்கம் மற்றும் ரத்த கொதிப்பு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனை கண்ட அவரது சகோதரர் கௌதம் மற்றும் தந்தை காந்தி ஆகியோர் ரேச்சலை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.இதனிடையே, அங்கு சிகிச்சை பெற பிடிக்காமல் யாரிடமும் சொல்லாமல் ரேச்சல் தனது தந்தை வீட்டிற்குச் சென்று தனது உடமைகளை எடுத்து கொண்டு தனது கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே சென்று 2 நாட்களில் அவரது கை கால்கள் வீக்கம் அடைந்ததை அடுத்து அவர் மூலகுலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது 2 கிட்னியும் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, அவரை மேல் சிகிச்சைகாக ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரேச்சலின் தந்தை காந்தி உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பல்வேறு பேஷன் நிகழ்ச்சிகள் நடத்த ரேச்சல் கடன் பெற்றதாகவும் அதுகுறித்து தனது கணவரிடம் கூட கூறாமல் மனஉளைச்சலில் இருந்ததாகவும், தனது மரணத்திற்கு கணவரோ, மாமியாரோ காரணம் இல்லை எனக் கடிதம் எழுதி வைத்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அவருக்கும் கணவருக்கும் ஏதேனும் பிரச்னையா? வேறு ஏதாவது காரணமா? என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாடல் அழகி தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் சக மாடலிங் அழிகள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன